கள்ளக்குறிச்சியில் சிகிச்சைக்கு பயந்து வீட்டிற்கு சென்றவர் உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சிகிச்சைக்குப் பயந்து வீட்டுக்குச் சென்றவர், ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு விளம்பர திமுக அரசுதான் பதில் கூற வேண்டுமென கணவரை இழந்த மனைவி கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் காண்போரை கலங்க வைத்தது.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்று வருவதால், உயிர் பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனால் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய குறிச்சியாக மாறி, தற்போது கண்ணீர் குறிச்சியாக மாறியுள்ளது. 

இந்நிலையில், கள்ளச் சாராய வியாபாரி சின்னதுரையிடம் சாராயம் வாங்கி குடித்ததால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சேச சமுத்திரம் பகுதியை சேர்ந்த சுப்ரமணி, சிகிச்சைக்கு பயந்து வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு ரத்த வாந்தி எடுத்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு வந்த குடும்பத்தினரும், உறவினர்களும் கண்ணீர் விட்டு கதறிய காட்சி காண்போரை கலங்க வைத்தது.

உயிரிழந்த கணவரின் காலைப் பிடித்து கதறித் துடித்த அவருடைய மனைவி வசந்த மலர், தனது கணவரின் உயிரை அரசு பறித்து விட்டதாக குற்றம் சாட்டினார். இதற்கு யார் பதில் கூறுவார் என்று கதறிய அவர், கள்ளச் சாராயத்தால் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்து விட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்தார். கள்ளச்சாராயம் விற்று என் கணவரை உயிர் பறிச்சிட்டாங்களே, அவங்க நல்லா இருப்பாங்களா என அவர் கதறி அழுத சம்பவம் மருத்துவமனை பகுதியையே உலுக்கி எடுத்தது.

Night
Day