கனமழையால் பாதிக்கப்பட்ட வி சாலை கிராம மக்களிடம் நேரில் நலம் விசாரித்தார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில் கொட்டும் மழையில் நின்று கொண்டிருந்த மக்களை நேரில் சந்தித்த அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பெய்த அதி கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. குறிப்பாக விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் குடியிருப்புகளையும், வீடுகளையும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. எந்த நிவாரண உதவிகளும் கிடைக்காமல் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் தஞ்சாவூரில் இருந்து கார் மூலம் சென்னை நோக்கி சென்ற புரட்சித்தாய் சின்னம்மா, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை என்ற இடத்திற்கு அருகே வந்த போது கொட்டும் மழையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கிராம மக்களை பார்த்ததும் காரை நிறுத்தி நலம் விசாரித்ததோடு மட்டுமின்றி, மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது பெரும் மழையால் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக வேதனை தெரிவித்த பொதுமக்கள் தங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எந்த உதவிகளும் கிடைக்கவில்லை என வேதனையுடன் முறையிட்டனர்.

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட வி சாலை கிராம மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களை அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் நேரில் சந்தித்து அவர்களுக்கு கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தி உள்ளார்.

varient
Night
Day