கடந்த 36 மணி நேரத்தில் இந்தியா-மியான்மர் எல்லையில் 6 நிலநடுக்கங்கள் பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடந்த 36 மணி நேரத்தில் இந்தியா-மியான்மர் எல்லையில் லேசானது முதல் மிதமானது வரையிலான ஆறு நிலநடுக்கங்கள் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 3.8 முதல் 4.5 வரை பதிவாகியுள்ளதாகவும் கூறியுள்ளது. கடைசி நிலநடுக்கம் காலை 11.21 மணிக்கு 4.3 ரிக்டர் அளவில் பதிவானது என்றும் அது மணிப்பூருக்கு அருகில் உணரப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.  இந்தியா-மியான்மர் எல்லையில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் இந்திய மற்றும் யூரேசிய தட்டுகளின் மோதலால் வகைப்படுத்தப்படும் சிக்கலான டெக்டோனிக் மண்டலத்திற்குள் இப்பகுதி அமைந்திருப்பதே இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

Night
Day