எஸ்.எஃப்.ஐ. மாணவர்கள் சாலைமறியல்...தள்ளுமுள்ளு..

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் யுஜிசி அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஜோதிடத்தை சேர்க்கும் யுஜிசி அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய மாணவர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது. சுமார் 50க்கும் மேற்பட்டோர் கையில் பதாகைகள் ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் பல்கலைக்கழக மானிய குழுவின் அறிக்கையை தீயிட்டு கொளுத்த முற்பட்டபோது, போலீசாருக்கும்-போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். 

Night
Day