உதயநிதிக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் ED சோதனை..!

எழுத்தின் அளவு: அ+ அ-

உதயநிதி ஸ்டாலினுக்‍கு நெருக்கமானவர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்‍கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

டாஸ்மாக் மது விற்பனை விவகாரத்தில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் கடந்த மார்ச் மாதம் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடந்த சோதனையில் அமலாக்கத்துறையினர் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் அதிகாரிகள் இல்லங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்‍கு நெருக்கமானவர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்‍கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இட்லி கடை படத்தை தயாரித்து வரும் Dawn பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் சோதனை நீடித்து வருகிறது. 

உதயநிதி வெளியிடும் பெரும்பாலான படங்களை, dawn பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தனுஷின்  இட்லி கடை, சிலம்பரசன் 49, சிவகார்த்திகேயனின் பராசக்தி உள்ளிட்ட படங்களை Dawn பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. Dawn பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படங்களை, உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட உள்ளது. எனவே இந்த படத்தயாரிப்புக்‍கான முதலீடு எங்கிருந்து பெறப்பட்டது. பல கோடி ரூபாய் முதலீடு சுழற்சி செய்யப்பட்டுள்ளதா எனவும் அமலாக்‍கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

Night
Day