செம்பரம்பாக்கத்தில் கலக்கும் கழிவுநீர்- தமிழக அரசுக்கு நோட்டீஸ்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவு நீர் கலப்பதை அதிகாரிகள் கண்காணிக்க தவறியது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில், இருங்காட்டுக் கோட்டை சிப்காட் தொழிற்பூங்கா, மருத்துவமனை, மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கலந்து வருவதாக கூறப்படுகிறது. இதனை தமிழக அரசின் நீர்வளத்துறையினர், கண்காணித்து தடுக்காமல் அலட்சியமாக இருப்பதாக வெளியான செய்தியின் அடிப்படையில்  தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தாமாக முன் வந்து வழக்கை எடுத்தது. வழக்கை விசாரித்த, தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இது தொடர்பாக தமிழக அரசு, இருங்காட்டுக் கோட்டை சிப்காட் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 15 ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Night
Day