குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்த 2 பேர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் பெண்கள் குளித்ததை வீடியோ பதிவு செய்தவர்களை கைது செய்யக்கோரி 5 மணி நேரத்திற்கும் மேலாக சாலைமறியல் நடைபெற்றதையடுத்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

செம்பட்டி அடுத்த வீரக்கல்லில் உள்ள வெள்ளைமாலை வீருமாறம்மன் கோயில் திருவிழாவுக்கு பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர். இந்நிலையில்  வந்த பெண்கள் குளித்ததை வண்ணம்பட்டியை சேர்ந்த 4 இளைஞர்கள் வீடியோ பதிவு செய்தனர். அவர்களை பிடித்து ஒப்படைத்தும் காவல் துறை அவர்களை தப்பிக்க விட்டதால் அதிகாலை முதல் காலை வரை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து இருவரை கைது செய்த  காவல் துறையினர் மேலும் இருவரை தேடி வருகின்றனர்.  

Night
Day