கொரட்டூர் சாலைகளில் தேங்கிய மழைநீர்- வாகன ஓட்டிகள் அவதி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை புறநகர் பகுதிகளான பாடி, கொரட்டூர், அம்பத்தூர், மண்ணூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் பாடி-அம்பத்தூர் செல்லும் சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகனங்கள் சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை நீர் சாலைகளில் குளம் போல் தேங்கி நிற்பதால், 50க்கும் மேற்பட்ட கடைகளில் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day