தமிழகத்திலும் தொடங்கியது தென்மேற்கு பருவமழை - வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா

எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளாவை தொடர்ந்து தமிழத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடலில் வரும் 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக கூறினார். கோவை, நெல்லை, நீலகிரி, மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் நாளை மற்றும் நாளை மறுநாள் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் தற்போது வரை இயல்பைவிட 92 சதவீதம் மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக கூறிய அமுதா, சென்னையில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இயல்பைவிட 110 சதவீதம் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

varient
Night
Day