உணவு வகைகளுக்கு பழைய எண்ணெய்யை பயன்படுத்தினால் புற்றுநோய் வர வாய்ப்பு - உணவு பாதுகாப்புத்துறையினர் அதிர்ச்சி தகவல்

எழுத்தின் அளவு: அ+ அ-

உணவு வகைகளுக்கு பழைய எண்ணெய்யை பயன்படுத்தினால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக உணவு பாதுகாப்புத்துறையினர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடியில் இயங்கும் உணவகங்கள் மற்றும் சாலையோர பானிபூரி கடைகளில் செயற்கை நிறமிகள் கலக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி மாநகர் பகுதியில், வேலவன் ஹைபர் மார்க்கெட் வளாகத்தில் இயங்கி வரும் பிரபல கேஎஃப்சி உணவகத்தில், அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த ஆய்வின் போது, உணவு வகைகளுக்கு தடை செய்யப்பட்ட மெக்னீசியம் சிலிகேட் என்ற ரசாயனம் எண்ணெயில் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. அதனை தொடர்ந்து உணவகத்திலிருந்து 18 கிலோ மெக்னீசியம் சிலிக்கேட்டை பறிமுதல் செய்த அதிகாரிகள், காலாவதியான 45 லிட்டர் எண்ணெய்யையும் பறிமுதல் செய்து அழித்தனர். 

முறையான தூய்மையின்றியும் கெமிக்கல் கலக்கப்படும் துரித உணவகங்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளார். 

தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவகத்தின் உரிமத்தை உணவு பாதுகாப்புத் துறையினர் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டனர். உணவுகளில் பழைய எண்ணெய்யை பயன்படுத்தினால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மாரியப்பன், அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். மேலும், தடை செய்யப்பட்ட எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். 


Night
Day