எழுத்தின் அளவு: அ+ அ- அ
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வரவேற்றுள்ளார். உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு திமுக தலைமையிலான அரசுக்கு கிடைத்த மாபெரும் சம்மட்டி அடியாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது என புரட்சித்தாய் சின்னம்மா விமர்சித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார். இது ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகவும், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 குடும்பத்தினர்களுக்கு கிடைத்த வெற்றியாகவும் பார்க்க முடிகிறது என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். மேலும், உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் அமைக்கப்படுகிற குழுவும் கண்காணிக்க இருப்பதன் மூலம் கரூர் துயர சம்பவத்தின் உண்மை பின்னணியும் விரைவில் வெளிவரக்கூடும் என்பதை அனைவராலும் அறிந்து கொள்ள முடிகிறது என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
கரூர் துயர சம்பவத்தில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு திமுக தலைமையிலான அரசுக்கு கிடைத்த மாபெரும் சம்மட்டி அடியாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது என புரட்சித்தாய் சின்னம்மா விமர்சித்துள்ளார். மேலும், கரூர் துயர சம்பவத்தில் விரைவில் உண்மைகள் வெளிவரவும், உயிர் நீத்தவர்களுக்கு உரிய நியாயம் கிடைத்திடவும் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாக கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.