இ-பாஸ் நடைமுறையால் வெறிச்சோடிய உதகை

எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானல் மற்றும் உதகை பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெற்று செல்ல வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததன் எதிரொலியாக கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பிரதான சுற்றுலா பகுதிகள் அனைத்தும் வெறிசோடி காணப்படுகிறது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை நம்பியுள்ள தெருவோர வியாபாரிகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் வாழ்வாதாரம் பாதித்துள்ளதாக வருத்தம் தெரிவித்து, இ-பாஸ் முறையை ரத்துசெய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

varient
Night
Day