எழுத்தின் அளவு: அ+ அ- அ
அம்பாசமுத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் கல்யாணி தியேட்டர் பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வருகை தந்தபோது, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இருசக்கர வாகனத்தில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புரட்சித்தாய் சின்னமாவை அணிவகுத்து அழைத்துச் சென்றனர்.
வாண வேடிக்கையுடன் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு வீரவாள் பரிசளிக்கப்பட்டது. அம்பாசமுத்திரம் கல்யாணி திரையரங்கம் அருகே வசித்து வரும் மக்கள், நிர்வாகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். அதனை கனிவுடன் புரட்சித்தாய் சின்னம்மா கேட்டு அரசாங்கத்திற்கு வலியுறுத்துவதாக தெரிவித்தார். கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை புரட்சித்தாய் சின்னம்மாவிடம் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய புரட்சித்தாய் சின்னம்மா, காலைச் சிற்றுண்டி திட்டத்தின் கீழ் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, சரியாக இல்லை என்று, பல இடங்களில் புகார் எழுந்துள்ளதாக குறிப்பிட்டார்.