எழுத்தின் அளவு: அ+ அ- அ
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு- வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் இதனால் மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பாலச்சந்திரன், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கடலூர், மயிலாடுதுறை ஆகிய இரு மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் பாலச்சந்திரன் கூறினார்.