ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ.74,000க்கு விற்பனை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 74 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்‍கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 74ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 50ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9ஆயிரத்து250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  வெள்ளி விலை 2 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 122 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து காணப்பட்ட நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைபிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Night
Day