ஆக.1 முதல் LPG டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 1ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகள் தொடர்பாக ஈரோடு சிப்காட்டில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில், சுமூகமான தீர்வு எட்டபடாததால் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். ஈரோடு, சேலம், திருச்சி ஆகிய இந்தியன் ஆயில் சிலிண்டர் நிரப்பும் நிறுவனங்களின் உற்பத்தி திறனை குறைத்ததாக அவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தமிழகத்தில் வரும் நாட்களில் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாய சூழல் உருவாகும் என கூறப்படுகிறது. 

Night
Day