எழுத்தின் அளவு: அ+ அ- அ
வேறு சமூக பெண்ணை காதலித்த ஐ.டி. ஊழியர் கவின் குமார் கொல்லப்பட்ட விவகாரத்தில் கொலையாளியின் பெற்றோரை கைது செய்ய வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து பெற்றோர்களும் உறவினர்களும் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மென் பொறியாளர் கவின், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் காதலித்த பெண்ணின் சகோதரரால் ஆணவக் கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து கவின் மரணத்திற்கு நீதிக்கேட்டும் கொலைக்கு காரணமான பெண்ணின் பெற்றோர்களான காவல் உதவி ஆய்வாளர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் திருச்செந்தூர் செல்லும் முக்காணி ரவுண்டானாவில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இளைஞர் கவின் கொலை வழக்கில் காவல் துறையினர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். போராட்டத்தைக் கலைக்க முயன்ற போலீசாருக்கும் கவினின் உறவினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்தநிலையில், கவின் குமார் கொலையில் தொடர்புடைய இளம்பெண்ணின் பெற்றோர்களான காவல் உதவி ஆய்வாளர்களை கைது செய்ய வலியுறுத்தி கவின் உடலை வாங்க மறுத்து 2வது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.