எழுத்தின் அளவு: அ+ அ- அ
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே அரசுப் பேருந்தும், டிராக்டரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரியில் இருந்து சேலம் நோக்கி 50 பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. தருமபுரி அரசு மருத்துவமனை அருகே பேருந்து சென்ற போது, வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் மீது எதிர்பாராதவிதமாக மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டரின் முன்பகுதி முழுவதுமாக சேதமடைந்தது. விபத்தில், அரசுப் பேருந்து ஓட்டுநர் நாராயணன், நடத்துநர் மாதேஸ் மற்றும் டிராக்டர் ஓட்டுநர் காத்திக் மற்றும் 5 பெண்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த சாலை விபத்தால் சேதமடைந்த பேருந்து மற்றும் டிராக்டரை ராட்சத இயந்திரத்தின் உதவியுடன் போலீசார் அப்புறப்படுத்தினர். விபத்து குறித்து நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.