காரின் முன்பக்க டயர் வெடித்து விபத்து - உயிர்தப்பிய விமான பணியாளர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி விமான நிலைய வளாகத்திற்குள் விமான பணியாளர்களை ஏற்றிச் சென்ற கார் முன்பக்க டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பைலட் குழுவினர் விமான நிலையத்திற்கு சொந்தமான காரில் பயணித்துள்ளனர். காரானது விமான நிலைய வளாகத்தில், வாகன கட்டணம் வசூலிக்கும் பகுதிக்கு முன்பாக சென்று கொண்டிருந்தது. அப்போது, காரின் முன்பக்க டயர் வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்து சிமெண்ட் தடுப்பை உடைத்துக் கொண்டு நின்றது. விபத்தில், காரில் பயணித்த விமான பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day