பக்கிங்காம் கால்வாய் மறைத்து நிகழ்ச்சி நடத்திய விளம்பர திமுக அரசு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பக்கிங்காம் கால்வாயை சரியாக பராமரிக்காமல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகைக்காக துணியால் மூடி மறைத்த அவலம் அரங்கேறியுள்ளது. தேனாம்பேட்டை, லாக் நகரில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடத்தை திறந்து வைக்க துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். இதற்காக புதிதாக கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடம் வரை பக்கிங்காம் கால்வாயை துணி போட்டு திமுகவினர் மூடி மறைத்து திறப்பு விழா நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆட்சியமைத்து 4 வருடங்கள் கடந்த நிலையிலும் மக்கள் நலனுக்காக எதுவும் செய்யாத திமுக அரசு, விளம்பரம் மட்டுமே செய்வதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Night
Day