அம்மா உணவகத்தில் சட்னிக்கும் பணமா....!

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அரியமங்கலத்தில் செயல்படும் அம்மா உணவகத்தில் சட்னிக்கு 2 ரூபாய் வசூல் செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஏழை, எளிய மக்கள் உணவு அருந்தி பயன்பெற வேண்டுமென மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகம் முழுவதும் அம்மா உணவகத்தை திறந்து வைத்தார். இதனால் ஏழை, எளிய மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களது பசி போக்கி பயன் பெற்றனர். ஆனால் விளம்பர திமுக ஆட்சி பொறுப்பேற்றநாள் முதல் அம்மா உணவகங்களுக்கு மூடுவிழா காண்பதிலேயே உறுதியாக உள்ளது.

இந்நிலையில், திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அரியமங்கலம் பகுதியில் அம்மா உணவகத்தில் இட்லி 1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் சட்னிக்கும் 2 ரூபாய் கட்டாயமாக வசூலிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அம்மா உணவகத்தில் சாப்பிட சென்ற ஒருவர் அதிர்ச்சி வீடியோவை வெளியிட்டு, கடந்த 10 நாட்களாக சட்னிக்கு 2 ரூபாய் வசூலித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலானதை அடுத்து பொதுமக்கள் விளம்பர திமுக அரசு மீது அதிருப்தியில் உள்ளனர்.

Night
Day