அம்பானி இல்லத் திருமண விழாவிற்குச் செல்லும் நடிகர் ரஜினிகாந்த்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தொழிலதிபர் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்துக்கு முந்தைய விழாவில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் ஜாம் நகருக்கு வருகை தந்துள்ளார். மனைவி லதா, மகள் ஐஸ்வர்யாவுடன், ஜாம் நகர் விமான நிலையத்துக்கு வருகை தந்த ரஜினிகாந்த்தை ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகள் வரவேற்றனர். வெளிர் நீல நிற டீ ஷர்ட்டில் சிம்பிளாக வந்த ரஜினி, காரில் ஏறி விழா நடைபெறும் அரங்கிற்கு சென்றார். முன்னதாக நேற்று முதலே உலக தொழிலதிபர்கள், பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஜாம் நகரில் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Night
Day