சர்ச்சை பிரமுகர்களுக்கு சீட் இல்லை - பாஜக

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வெறுப்பு பேச்சில் ஈடுபட்ட நாடாளுமன்ற எம்.பி.க்களான பிரக்யா தாக்கூர், ரமேஷ் பிதூரி, சாஹிப் சிங் வர்மா ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க பா.ஜ.க. மறுத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 195 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை பா.ஜ.க. நேற்று மாலை வெளியிட்டது. இப்பட்டியலில் மகாத்மா காந்தி, கோட்சே விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய பிரக்யா தாக்கூருக்கும், 2020ஆம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேச சட்டமன்ற தேர்தலில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சாஹிப் சிங் வர்மாவுக்கும், நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த ரமேஷ் பிதூரிக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பிரக்யா தாக்கூருக்கு பதில் அலோக் சர்மாவும், சாஹிப் சிங் வர்மாவுக்கு பதில் கமல்ஜித் ஷெராவத்துக்கும், ரமேஷ் பிதூரிக்கு பதில் ரம்வீர் பிதூரிக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Night
Day