எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தை பின்னுக்கு தள்ளியதே திமுக அரசின் சாதனை என்று குற்றம் சாட்டியுள்ள அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, ஆட்சி செய்வதற்கு மாறாக திமுக அரசியல் செய்வதாக விமர்சித்துள்ளார்.
சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தியப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புரட்சித்தாய் சின்னம்மா, மத்திய பட்ஜெட்டில் சில வரவேற்கத்தக்கது சிலவற்றை பரிசீலினை செய்ய வேண்டும் என தெரிவித்தார். அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பத்திரிகையாளர்கள் மீது எதற்காக நடவடிக்கை கேள்வி எழுப்பிய புரட்சித்தாய் சின்னம்மா, வேங்கைவயல் விவகாரத்தில் திமுக அரசு உண்மையை மூடி மறைப்பதாக குற்றம் சாட்டினார். மாண்புமிகு அம்மா ஆட்சியில் 2வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டினார்.