அடிதடியில் ஈடுபடும் மாணவர்கள் - நீதிபதி வேதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வீட்டு வேலை செய்து பெற்றோர் படிக்க அனுப்பும் நிலையில் கல்லூரிக்கு கூட செல்லாமல் மாணவர்கள் அடிதடியில் ஈடுபடுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் என்பவரை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில், மரணமடைந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்துரு என்பவர் ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்து இருந்தார். இதனை ​நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார். அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்‍கறிஞர்,  இந்த வழக்‍கு விசாரணை நிலுவையில் உள்ளதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக மாணவர்கள் மீது 22 வழக்குகள் பல்வேறு காவல் நிலையத்தில் பதியபட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி,வீட்டு வேலை செய்து பெற்றோர் படிக்க அனுப்பும் நிலையில் கல்லூரிக்கு கூட செல்லாமல் மாணவர்கள் அடிதடியில் ஈடுபடுவதாக வேதனை தெரிவித்தார்  

Night
Day