''யாத்திரையின் இறுதியில் பிரதமர் கலந்து கொள்வார்'' - எல்.முருகன் பேச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வரும் மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று 3-வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்பார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை வள்ளலார் நகரில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், என் மண் என் மக்கள் யாத்திரை தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார். யாத்திரையின் தொடக்கத்தில் அமித் ஷாவும், 200-வது பொதுக் கூட்டத்தில் ஜே.பி.நட்டாவும் கலந்து கொண்டது போல், யாத்திரையின் இறுதி நாளில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாக கூறினார். தமிழர்களுக்கு தொடர்ந்து பெருமை சேர்த்து வரும் பிரதமர் மோடி 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறளை வெளியிட்டு இருப்பதாகவும் எல்.முருகன் தெரிவித்தார்.

Night
Day