வரும் 10ம் தேதி ரிலீசாகும் கவினின் 'ஸ்டார்' திரைப்படம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் கவினின் ஸ்டார் திரைப்படத்திற்கு யு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் இளன் இயக்கத்தில், நடிகர் கவின் நடிப்பில் ஸ்டார் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில், லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வரும் வெள்ளிக்கிழமை ஸ்டார் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்திற்கு தணிக்கை வாரியம் யு சான்றிதழ் அளித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

Night
Day