எழுத்தின் அளவு: அ+ அ- அ
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்திரப்பதிவு செய்ய துணை பதிவாளரின் உதவியாளர் 20 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்பதாக பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார்.
வாலாஜாபாத் அடுத்த முத்தியால்பேட்டை கிராமத்தில் வசிக்கும் ரஞ்சித்குமார், வள்ளுவப்பாக்கம் கிராமத்தில் தான் வாங்கிய 5.49 ஏக்கர் நிலத்தை வாலாஜாபாத் பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் சென்றபோது, துணை பதிவாளருக்குப் பதிலாக உதவியாளர் செல்வம் என்பவர் இருந்துள்ளார். அப்போது, மாநகராட்சிக்கு உட்பட்டது என்று கூறியும், அதன் மதிப்பு உயர்ந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். ரஞ்சித்குமாரும் ஏற்கனவே வரி செலுத்தியதன் காரணத்தால், நிலுவைப் பத்திரத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், தனக்கு 20 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுக்காவிட்டால் மாநகராட்சி மதிப்புக்கு மாற்றி விடுவதாக கூறி மிரட்டி உள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட ரஞ்சித்குமார் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.