எழுத்தின் அளவு: அ+ அ- அ
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே முன்பகை காரணமாக கொலை செய்யப்பட்ட இளைஞரின் தலை, ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாலத்திற்கு கீழே மீட்கப்பட்டது.
ஆத்தூர் அருகே திண்டுக்கல் - வத்தலகுண்டு சாலையில் உள்ள பழைய வக்கம்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பு அமைந்துள்ளது. தோட்டத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் உயிரிழந்த நிலையில் தலையின்றி சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டர். விசாரணையில் உயிரிழந்தவர் சிவக்குமார் என்பதும், அவரை கல்லால் தாக்கியும், கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் கொலை செய்யப்பட்டவரின் தலையை கொலையாளிகள் எடுத்து சென்றுள்ள நிலையில், அதனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் இளைஞர் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாலத்திற்கு கீழே தலை கிடைந்துள்ளது. 4 மணி நேர தேடலுக்கு பிறகு இளைஞரின் தலையை காவல்துறையினர் மீட்டனர். மேலும் உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் முன்பகை காரணமாக இந்த கொலை நடைபெற்று இருக்கலாம் என தெரியவந்துள்ளது.