தகாத உறவு : தகராறில் ஈடுபட்ட காவல் உதவியாளர், பெண் காவலர் பணியிடை நீக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவில்பட்டி தகாத உறவு காரணமாக தகராறில் ஈடுபட்ட காவல் உதவியாளர் மற்றும் பெண் காவலர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நடவடிக்கைக்கு பின்னரும் பெண் காவலருக்கு ட்ராபிக் எஸ்ஐ கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி உதவி ஆய்வாளர் செல்வகுமாருக்கும், அதே காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் காவலர் இந்திரா காந்தி என்பவரும் முறை தவறிய உறவு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த மாதம் இருபதாம் தேதி சாலையிலே இருவரும் தகராறில் ஈடுபடுள்ளனர். இதனையடுத்து இருவரும் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

அதன்பின்னரும் இருவருக்கும் இடையே செல்போன் வழியே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது காதல் வலையில் சிக்க வைத்து ஏமாற்றி விட்டதாகக் கூறிய எஸ்.ஐ.செல்வகுமார், பெண் காவலர் இந்திரா காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்து எச்சரித்துள்ளார்.  இதுதொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பெண் காவலர் இந்திரா காந்தியை செப்டம்பர் ஐந்தாம் தேதி பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார். இதற்கான உத்தரவை எடுத்துச் சென்ற காவலர்கள் தெற்கு திட்டங்குளத்தில் உள்ள வீட்டில் இந்திராகாந்தி இல்லாததால்  ஒட்டிவிட்டுச் சென்றனர். இதனிடையே பெண் காவலர் இந்திரா காந்தி அளித்த புகாரின் பேரில் கொலை மிரட்டல் விடுத்த எஸ்.ஐ. செல்வகுமார் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹதிமணி, எஸ்.ஐ. செல்வகுமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Night
Day