பூங்காவுக்கு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு - சென்னை மாநகராட்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் 5 வயது சிறுமியை ராட்வீலர் நாய்கள் கடித்த குதறிய சம்பவத்தை தொடர்ந்து,  பூங்காக்களில் நாய்களை அழைத்துவருவதற்கு மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை ராட்வீலர் நாய்கள் கடத்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களின் கண்காணிப்பாளர்களுக்கு, மாநகராட்சி சுற்றறிக்கை விடுத்துள்ளது. அதில், உரிமம் பெற்று, தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்களை மட்டுமே பூங்காவிற்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் கழுத்துக்கு சங்கிலி போட்டு, வாயை மூடியபடி அழைத்து வரப்படும் நாய்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. பூங்காவிற்குள் குழந்தைகள் விளையாடும் இடத்தில் நாய்களுக்கு அனுமதி இல்லை என்றும், ஒருவர் ஒரு வளர்ப்பு நாயை மட்டுமே பூங்காவிற்குள் கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் பூங்கா காவலர்கள் கடுமையாக கண்காணித்து அமல்படுத்த வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. 

Night
Day