அஜித் படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை

எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் அஜித்தின் "குட் பேட் அக்லி" திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியானது. இப்படத்தில் தான் இசையமைத்த பாடல்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தியுள்ளதாகக் கூறி இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதற்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்தில், இளையராஜா இசையமைத்த பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.

Night
Day