மஞ்சும்மல் பாய்ஸ் பட நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அனுமதியின்றி குணா திரைப்பட பாடலை பயன்படுத்தியதாக, மஞ்சுமல் பாய்ஸ் திரைப்பட நிறுவனத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

இளையராஜா சார்பில் அவருடைய வழக்கறிஞர் சரவணன் அனுப்பியுள்ள நோட்டீசில், படத்தில் இடம் பெற்ற கண்மணி அன்போடு பாடலை, முறையாக அனுமதி பெற்று பயன்படுத்தியிருக்க வேண்டும் என்றும், அல்லது பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீடு வழங்க வேண்டும், இல்லையெனில் பதிப்புரிமையை மீறியதாக கருதி, உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day