சினிமா
யூடியூபர் விஷ்ணுவுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்
யூடியூபர் விஷ்ணுவுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்மனைவி கொடுத்த புகாரின் பேர?...
நடிகை டாப்ஸி தனது காதலனான பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போயேயை திருமணம் செய்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. அதை தொடர்ந்து ஆரம்பம், காஞ்சனா 2 உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், டென்மார்க் நாட்டை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்யாஸ் என்பவரை பல ஆண்டுகளாக டாப்ஸி காதலித்து வந்த நிலையில், இவர்களது திருமணம் கடந்த 23ம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், திரைப்பிரபலங்கள் மட்டும் பங்கேற்றதாக தெரிகிறது. இதையடுத்து நடிகை டாப்ஸிக்கு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
யூடியூபர் விஷ்ணுவுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்மனைவி கொடுத்த புகாரின் பேர?...
நிலப்பிரச்னை - இருதரப்பினர் மோதல்மயிலாடுதுறை மாவட்டம் கஞ்சா நகரம் கிராமத...