பர்னிச்சர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர மாநிலம் ஏலூரூ அருகே உள்ள பர்னிச்சர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏலூரூ அடுத்த வெங்காயகூடம் பகுதியில் சுஷ்மிதா பர்னிச்சர் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில், திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அதிகம் இருந்ததால் தீ  மளமளவென பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. இதனால் அப்பகுதியே புகைமூட்டமாக காட்சியளித்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத்துறையினர்  தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கி தொழிற்சாலையில் இருந்த மூலப் பொருட்கள், பர்னிச்சர்கள், ஷோபாக்கள் என சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த  போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day