நாம் செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் நாட்டின் வளர்ச்சிக்கான வாக்காக இருக்க வேண்டும் - நடிகர் சூரி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கருடன் திரைப்பட பணிகள் முடிந்துவிட்டதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் கருடன் திரைப்படத்தில், நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். இந்தநிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சூரி, நமது வாக்கு சாதாரணமானது அல்ல எனவும், ஒவ்வொருவரும் செலுத்தும் வாக்கு நாட்டின் வளர்ச்சிக்கான வாக்காக இருக்க வேண்டும் எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கருடன் திரைப்பட பணிகள் முடிந்துவிட்டதாகவும், விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கு முன்பு கருடன் திரைப்படம் வெளியாகும் எனவும் தெரிவித்தார். 

varient
Night
Day