நடிகைகளுக்கு சம்பளம் குறைவாக வழங்கப்படுவதாக நடிகை கிருத்தி சனோன் கருத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களும் நல்ல வசூல் பார்க்கும் சூழலில், நடிகைகளை விட நடிகர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுவது ஏன்? என நடிகை கிருத்தி சனோன் கேள்வி எழுப்பியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் ஆதிபுருஷ் படத்தில் சீதை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் க்ரூ என் ஹிந்தி படம் வெளியானது. இந்நிலையில் நடிகர்களின் சம்பளம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கிருத்தி சனோன், நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் வழங்கப்படும் சம்பளத்தில் நிறைய வித்தியாசம் இருப்பதாக தெரிவித்தார். 10 வருடங்களாக வெற்றி படங்கள் கொடுக்காத நடிக்கருக்கு அதிக சம்பளம் வழங்கப்படுவதாக தெரிவித்த அவர், நடிகைகளுக்கு குறைவாகவே சம்பளம் வழங்கப்படுவதாக குறிப்பிட்டார். 

Night
Day