தெலங்கானா காங். அமைச்சர் சுரேகாவுக்கு எதிராக கேடி ராமாராவ் அவதூறு நோட்டீஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் நாக சைதன்யா மற்றும் சமந்தா ஆகியோரின் விவாகரத்து குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகாவுக்கு எதிராக பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கேடி ராமாராவ் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக கேடி ராமாராவ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அரசியல் நோக்கத்திற்காக சுரேகா, தனது பெயருக்கு களங்கம் விளைக்கும் வகையில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளதாக கண்டனம் தெரிவித்தார். மேலும் அமைச்சர் பதவியை சுரேகா, தவறாக பயன்படுத்தி வருவதாகவும் கூறிய அவர், சுரேகா மன்னிப்பு கேட்காவிட்டால், சட்டப்படி அவதூறு வழக்கு தொடர உள்ளதாக கூறினார்.

Night
Day