தீபாவளிக்கு ஓடிடி தளத்தில் வெளியாகிறது 'லப்பர் பந்து' திரைப்படம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வெளியான 'லப்பர் பந்து' திரைப்படம் ஓடிடி தளத்தில் வரும் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர்கள் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவான லப்பர் பந்து திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 20ம் தேதி வெளியானது. கிரிக்கெட்டை மையமாக வைத்து குடும்ப படமாகவும் இது உருவாகியுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது
அதன்படி, 'லப்பர் பந்து' திரைப்படம் வரும் 31ம் தேதி ஹாட் ஸ்டார் மற்றும் சிம்பிலி சவுத் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது.

varient
Night
Day