சினிமா
மாறி, மாறி தாலிக் கட்டிக்கொண்ட மலையாள நடிகைகள்...
சின்ன திரை தொடர்களில் நடித்துவரும் மலையாள நடிகை அஸ்வதி, தன்னுடன் நடிக்கு?...
லால் சலாம் படத்தில் 20 கேமராக்கள் கொண்டு எடுக்கப்பட்ட கிரிக்கெட் போட்டி தொடர்பான காட்சிகள் திருடு போனதால் படத்தின் தன்மையே மாறிவிட்டதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விக்ரந்த், விஷ்ணு விஷால் மற்றும் நடிகர் செந்தில் ஆகியோர் நடித்த லால் சலாம், படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார். பலத்த எதிர்பார்ப்புடன் ரிலீசான லால் சலாம் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வியை தழுவியது. இந்நிலையில் லால் சலாம் படத்தில் முக்கிய காட்சிகள் இடம் பெற்ற ஒளி நாடா திருடு போய்விட்டதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சுமார் 21 நாட்கள் படப்பிடிப்பு நடந்த காட்சிகள் காணாமல் போன நிலையில், நடிகர்களின் கெட்டப்பும் மாறியதால், தொலைந்து போன காட்சிகளை மீண்டும் எடுக்க முடியவில்லை என்றும் இருக்கும் காட்சிகளை வைத்து படத்தை எடிட் செய்து வெளியிட்டதாகவும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதனால் படத்தின் போக்கே மாறி, தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சின்ன திரை தொடர்களில் நடித்துவரும் மலையாள நடிகை அஸ்வதி, தன்னுடன் நடிக்கு?...
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...