சென்னை அப்போலோ மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ரஜினிகாந்த் குணமடைந்து வீடு திரும்பினார். 

கடந்த 30ம் தேதி திடீரென நடிகர் ரஜினிகாந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அப்போலோ மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்ட,  அவருக்கு இதயத்தில் இருந்து பிரியும் இரத்த நாளத்தில் வீக்கம் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கு அறுவை சிகிச்சை அல்லாத ட்ரான்ஸ்கேதீத்தர் முறை மூலம் ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் ரஜினிகாந்தின் உடல்நிலை சீரானதால் அவர் நலமுடன் இருப்பதாக அப்போலோ மருத்துவமனை அறிவித்தது. இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். 

varient
Night
Day