எம்புரானுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

எம்புரான் திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணைக்கு எதிரான காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றுள்ளதாக குற்றம்சாட்டிய தமிழக விவசாயிகள் போரட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் ஆகியோர் நடிப்பில் எம்புரான் படம் கடந்த 27-ம் தேதி வெளியானது. இத்திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் இந்துத்துவ கொள்கைகளையும், தலைவர்களையும் இழிவுப்படுத்தும் கருத்துகள் இடம்பெற்றிருப்பதாக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சர்ச்சைகளை முன் வைக்கத் தொடங்கின. இதுதொடர்பாக நடிகர் மோகன்லால் மன்னிப்பு கோரியதுடன் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில் படத்தின் சர்ச்சைக்குரிய கர்ப்பிணி பெண் வெட்டப்படுவது போன்ற காட்சி உள்பட 3 நிமிட காட்சிகள் நீக்கம் செய்துவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் நாளை முதல் நாளை முதல், படத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு திரையரங்குகளில் திரையிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் எம்புரான் திரைப்படத்தில் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிரான காட்சிகள் மற்றும் வசனங்களை இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த காட்சிகளை நீக்கக் கோரியும், படக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக விவசாய சங்கங்கள் வரும் இரண்டாம் தேதி தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் போராட்டம் நடத்தபோவதாக அறிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய வசனங்களையும் காட்சிகளையும் உடனடியாக நீக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் எனவும் விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. 

Night
Day