அயலான் படத்தை பார்த்து சிவகார்த்திகேயனை பாராட்டிய ரஜினி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அயலான் படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயனை ரஜினி பாராட்டினார். ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலான் திரைப்படம் கடந்த 12ம் தேதி வெளியானது. இதில்,ல் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்த இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்தன. இப்படத்தை பார்த்த நடிகர் ரஜினி, தாங்கள் எப்படி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறீர்கள் என்றும், தங்களுடைய படம் தனக்கு உத்வேகம் அளிப்பதாகவும் அவர் சிவகார்த்திகேயனை பாராட்டியுள்ளார். 

Night
Day