தமிழகத்தில் திமுக ரவுடி ஆட்சி நடத்திவருகிறது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் திமுக ரவுடி ஆட்சியை நடத்திவருவதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 75வது குடியரசு தினத்தையொட்டி சென்னை கமலாலயத்தில் பாஜக மூத்த நிர்வாகி டாக்டர் ஹச்.வி.ஹன்டே மற்றும் கர்னல் தியாகராஜன் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மகளிரணி தேசியத் தலைவியும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு நாளும் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது என்றார். சிறுமியை தாக்கிய வழக்கில் திமுக எம்.எல்.ஏ மகன் மற்றும் மருமகள் மீது காவல்துறை காலதாமதமான நடவடிக்கை மேற்கொண்டதாக குற்றச்சாட்டினார். தமிழகத்தில் சட்டம் ஓழுங்கு கேள்வி குறியாக உள்ளது என்றும், தி்முக ரவுடி ஆட்சியை நடத்தி வருவதாகவும் அவர் சாடினார். 

varient
Night
Day