சினிமா
இனி திரைப்படம் தயாரிக்க போவதில்லை! - இயக்குநர் வெற்றிமாறன்
திரைப்படங்கள் தயாரிப்பதை தான் நிறுத்த போவதாக இயக்குநர் வெற்றிமாறன் அறிவ?...
பிக் பாஸ் வருண் நடிப்பில் உருவாகியுள்ள ஜோஷ்வா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனரும், நடிகருமான கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ஜோஷ்வா படம் பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருந்தது. வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில், வருண் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019-ம் ஆண்டு முடிந்தது. ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் ரிலீஸ் ஆகவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் மார்ச் மாதம் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
திரைப்படங்கள் தயாரிப்பதை தான் நிறுத்த போவதாக இயக்குநர் வெற்றிமாறன் அறிவ?...
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முன?...