"கூலி" - ரோகினி திரையரங்கில் அலைமோதும் ரசிகர்கள் கூட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள கூலி திரைப்படத்தை காண, திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள் மேளதாளங்கள் முழங்கி, பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி உள்ள திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜூனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

சென்னை ரோகிணி திரையரங்கில் வெளியாகி உள்ள கூலி திரைப்படத்தை காண ரசிகர்கள் குவிந்துள்ளனர். திரையரங்கும் முன்பு, மேளதாளங்கள் முழங்கி, பட்டாசுகள் வெடித்து ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Night
Day