ESIC மருத்துவமனையில் ICU வார்டில் பெண் நோயாளிக்கு பாலியல் வன்கொடுமை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராஜஸ்தானில் உள்ள ESIC மருத்துவக் கல்லூரி ICU வார்டில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு 32 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்தப் பெண்ணின் படுக்கையைச் சுற்றி திரைச்சீலைகள் மூடப்பட்டு இந்த கொடூரத்தை நர்சிங் ஊழியர் செய்துள்ளார். காலையில் சுயநினைவிற்கு வந்த பெண், தனது குடும்பத்தினரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவரை மன்னிப்பு கேட்க வைத்து சம்பவத்தை மூடி மறைக்க முயற்சி நடந்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண், மாவட்ட நீதிபதியிடம் புகார் அளிக்க அவர், உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

varient
Night
Day