மருத்துவ கழிவு விவகாரம் - கேரளா விரைந்தனர் போலீசார்

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லையில் கேரளா மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் சேலத்தை சேர்ந்த ஒருவரை விசாரணைக்காக திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றிருக்கிறார்கள்.


கேரளா மாநிலம் திருவனந்தபுரம் புற்றுநோய் மண்டல அலுவலகத்தில் இருந்து மருத்துவக்கழிவுகள்  கொண்டு வரப்பட்டு, நெல்லை மாவட்டம் பேட்டை அருகில் உள்ள பழவூர், கொண்ட நகரம், கோடகநல்லூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில்  சேலத்தை சேர்ந்த ஒருவரை விசாரணைக்காக  திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்துக்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.

Night
Day