மன உளைச்சலால் தாம்பரம் போக்குவரத்து பணிமனை இளநிலை பொறியாளர் தற்கொலை

எழுத்தின் அளவு: அ+ அ-

மருத்துவ விடுப்பு தராமலும் பணி வழங்காமலும் இழுத்தடிப்பு செய்ததால் மனஉளைச்சலுக்கு ஆளான மாநகர போக்குவரத்து கழக ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநகர போக்குவரத்து கழகத்தில் இளநிலை பொறியாளராக இருந்த யுவராஜ், கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் உடல்நல குறைபாடு காரணமாக விடுப்பு எடுத்துள்ளார். அதற்கான மருத்துவ சான்றிதழை அளித்தும் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பணிமனை மேலாளரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் மனிதவள மேம்பாட்டு துறையில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், தாம்பரம் பணிமனை மேலாளர் கோவிந்தராஜ், மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி சொர்ணலதா ஆகியோர்தான் தனது தற்கொலைக்கு காரணம் எனக்கூறி காவல்துறை தலைமை இயக்குனருக்கு யுவராஜ் இமெயில் அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day