மகளிர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்

எழுத்தின் அளவு: அ+ அ-

நூற்றுக்கும் மேற்பட்ட பெண் போலீஸார் பாதுகாப்புடன் திருச்சி நீதிமன்றத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். 

பெண் காவலர்களைபற்றி இழிவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே முசிறி டிஎஸ்பி யாஸ்மின் அளித்த புகாரில் விசாரணைக்கு ஆஜர்படுத்த சவுக்கு சங்கர் கோவையில் இருந்து திருச்சிக்கு அழைத்து செல்லப்பட்டார். திருச்சி மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கரை அம்மாவட்ட காவல்துறையிரையைச் சேர்ந்த பெண் காவலர்கள் அடங்கிய குழுவினர் அழைத்து வந்தனர். இதன் காரணமாக நீதிமன்றம் வளாகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.  நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் சவுக்கு சங்கரை ஆஜர்படுத்தியபோது அவரை பெண் போலீஸ் எஸ்கார்ட் ஒருவர் தக்கியதாக அவரது வழக்கறிஞர்கள் புகார் தெரிவித்தனர். சவுக்கு சங்கர் மீது இதுவரை கோவையில் 2 வழக்குகளும், சென்னையில் 4 வழக்குகளும், திருச்சி மற்றும் தேனி மாவட்டத்தில் தலா ஒரு வழக்கு என 4 மாவட்டங்களில் 7 வழக்குகள் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

varient
Night
Day